நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உடலில் ரத்தம் உறையாமல் இருக்கவும், பெரிதும் உதவுவது இந்த ஒமேகா 3 அமிலம் தான்.
முக்கியமாக, மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப் படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
அந்த அளவுக்கு ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள மீன்களில் வவ்வாலும் ஒன்று. வவ்வால் மீன்களில் 20-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன்கள் உண்டு என்றாலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து வகை வவ்வால் மீன்களிலுமே ஒரே மாதிரி கிடைக்கின்றன.
வவ்வால் மீன்களில், குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. வைட்டமின் A, B1., D, B12 போன்றவை நிறைந்துள்ளன. கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமுள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது.
அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வவ்வால் மீன் நன்மை தரக்கூடியதே. சரி இனி வவ்வால் மீன் பயன்படுத்தி டேஸ்டியான வவ்வால் மீன் ஃப்ரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
வவ்வால் மீன் - 1
இஞ்சி -பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
வவ்வால் மீன் - 1
இஞ்சி -பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் (தனியாத் தூள்) - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை:
வவ்வால் மீனின் சிறகை நறுக்கி கழுவி மென்மையான துணியால் துடைத்து வைக்கவும். ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் கலந்து மீனின் மீது தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மீனின் மீது இருபுறமும் தடவி வைக்கவும். ஒரு பவுலில் ரவை, அரிசி மாவை தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
ஊறிய மீனை அரிசிக் கலவையில் முக்கியெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் இருபுறமும் நான்கு நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
ஊறிய மீனை அரிசிக் கலவையில் முக்கியெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் இருபுறமும் நான்கு நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.