சுவையான இட்லி மிருதுவாக வரவேண்டுமா?





சுவையான இட்லி மிருதுவாக வரவேண்டுமா?

0
காலை உணவுக்கு ஏற்றது இட்லி. எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்ப தில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருது வாகவும், சில நாட்கள் கல் போன்றும் இருக்கும். 
சுவையான இட்லி மிருதுவாக வரவேண்டுமா?
எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.. 

அரிசியை முக்கால் பதத்தில் அரைத்து வைத்து உப்பு சேர்த்து கலக்காமல் வைத்திருந்தால் புளிக்காமல் இருக்கும். தேவைக்கேற்ப உப்பை அவ்வப்போது கலந்து கொண்டால் நீண்ட நாட்களுக்கு வரும்.
இட்லி, தோசை மாவுக்கு எப்பொழுதும் தூள் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்த்து அரை பட்டவுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள உளுந்தையும் அதிலேயே போட்டு ஒரு முறை நன்கு ஓட விடுங்கள். 

பிறகு எல்லா மாவும் அதிலேயே கலந்து விடும். அதன் பிறகு இரண்டு பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று எவர்சில்வர் பாத்திரமாகவும், இன்னொன்று பிளாஸ்டிக் பாத்திரமாகவும் இருக்க வேண்டும். 

பிளாஸ்டிக் வாளியில் இருக்கும் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். எவர் சில்வரில் நாளைக்கு நீங்கள் பயன்படுத்த இருக்கும் அளவிற்கு மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

8 மணி நேரம் நன்கு புளித்த பின்பு லேசாக மாவை உடைந்து விடாமல் கலந்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி சுட்டாலும் சரி, தோசை சுட்டாலும் சரி சூப்பராக வரும் ட்ரை பண்ணி பாருங்க.

வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: 

புழுங்கல் அரிசி – 4 தம்ளர் 

உளுந்து – 1 டம்ளர் 

வெந்தயம் – 1/2 ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்த வேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி முதல் 5 மணி நேரமாவது ஊற வைக்கவும். 
பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். 

பிறகு அரிசியை அரைத்து அதனுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். 

அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)