சுவையான அவல் கார பொங்கல் செய்வது எப்படி?





சுவையான அவல் கார பொங்கல் செய்வது எப்படி?

0
அவல் (அல்லது) தட்டையான அரிசி (Flattened rice) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் அரிசியினை தட்டை வடிவத்தில் தயார் செய்து பயன்படுத்தும் பொருளாகும். 
சுவையான அவல் கார பொங்கல் செய்வது எப்படி?
அரிசியானது தட்டையாக்குவதற்கு முன் அவிக்கப்படுகிறது. இவ்வாறாகத் தயாரிக்கப்படும் அவலை அதிகமாகச் சமைக்காமல் உணவாக உண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்.  அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். 

அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும். உடலின் சூட்டைத் தணிக்கும், செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். 

சரி இனி அவல் கொண்டு சுவையான அவல் கார பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை: 

அவல் - அரை கப்

பாசிப்பருப்பு - கால் கப்

பெருங்காயதூள் - சிறிதளவு

மிளகு, சீரகம் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)

இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

எண்ணெய், நெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !

செய்முறை: 
சுவையான அவல் கார பொங்கல் செய்வது எப்படி?
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறவும். 

அவல் ஓரளவு வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பு, பெருங்காயதூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சத்தான சுவையான அவல் கார பொங்கல் ரெடி.
குறிப்பு: 

சிவப்பு அவலிலும் செய்யலாம். ருசி மேலும் பிரமாதமாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)