கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது எப்படி?





கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது எப்படி?

0
ஃப்ரைடு சிக்கன் எனச் சொல்லப்படும் கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் கேஎஃப்சி சிக்கன் முதலிடத்தில் உள்ளது. 
கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது எப்படி?
பர்த்டே பார்ட்டி தொடங்கி கெட் டூ கெதர் வரை கேஎஃப்சி சிக்கன் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவ தில்லை. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கேஎஃப்சி சிக்கன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப் படுகின்றன. 

விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் கேஎஃப்சி சிக்கன்கள் தேவைப் படுக்கின்றன.

தேவையானவை: 

சிக்கன் லெக் பீஸ் - 2 துண்டுகள்

மிளகாய்த் தூள் - 10 கிராம்

சீரகத் தூள் - 5 கிராம்

மிளகுத் தூள் - 5 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

எலுமிச்சைப் பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)

இஞ்சி -பூண்டு பேஸ்ட் - 10 கிராம்

இஞ்சி -பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்

கடலை மாவு - 10 கிராம்

அரிசி மாவு - 5 கிராம்

கார்ன் ஃப்ளார் - 10 கிராம்

வெள்ளை எள் - 5 கிராம்

பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 5 கிராம் (பொடியாக நறுக்கவும்)

குடமிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

வெங்காயத் தாள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்

சோயா சாஸ் - 3 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கெண்டகி சிக்கன் செய்வது

சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி -பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, 

மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

நம் எலும்புகளை காத்திட கீரை ஜூஸ் குடிங்க !

பிறகு, எண்ணெயில் பொரித் தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித் தெடுத்தால் போதுமானது). 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயத் தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். 

இத்துடன் பொரித்த சிக்கன் துண்டு களையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும். அனைத்து மசாலாக் களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கவும்.

குறிப்பு:
தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட்டால், கெண்டகி சிக்கனின் ருசி தூக்கலாக இருக்கும்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)