ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடாவிட்டாலும், வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியம் என்று வரும் போது அதில் பாலியல் ஆரோக்கியமும் அடங்கும்.
ஒருவரது பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆட்டிறைச்சி பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல.
ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மட்டனில் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றம் வலிமைக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
எனவே மட்டனை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சரி இனி சூப்பரான மட்டன் கொத்துக்கறி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை:
கொத்துக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி -பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு,
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - சிறிதளவு
பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்புத் தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?
செய்முறை:
மட்டன் கொத்துக் கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக் கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சோம்புத் தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
கூந்தலுக்கு டார்க் பிரவுன் ஹென்னா செய்வது எப்படி?
இத்துடன் வேக வைத்த கொத்துக் கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.