முருங்கையின் இலைகளில் இருந்து அதன் பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடி பாகம் வரை அனைத்தும் மருத்துவப் பொக்கிஷங்கள் எனத் தெரிந்தே
அதை நமக்கு எளிதாகக் கிடைக்கும்படி செய்து அன்றாட உணவில் சேர்த்து நலம் பெற உதவியுள்ளனர் நமது முன்னோர்கள்.
அதிக அளவிலான இரும்புச் சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி,
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் இப்படி ஏகப்பட்ட சத்துக்களை தன்னுள்ளே கொண்டது தான் முருங்கை இலைகள்.
மற்றவற்றை பயன்படுத்தவில்லை எனினும் முருங்கை இலையின் சூப்பை வைத்துக் குடித்தால் நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
தேவையான பொருள்கள்:
முருங்கை கீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
செய்முறை :
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேக வைத்து கொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி யிருக்கும்.
நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் !அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப் பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகி விடும்.
திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
(வடிகட்டிய பின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டடும்.
நன்மைகள்
நலம் தரும் ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைய உள்ளதால் இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தவிர்க்கிறது.
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச் செய்து நோய் பாதிப்புகளை வர விடாமல் தடுக்கிறது. மெட்டபாலிசத்தைத் தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது.
எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த சூப் இது. கொழுப்பு அளவைக் குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது. தொண்டை வலி, சளி பாதிப்பு, செரிமானமின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்து இது.