அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஓன்று தான் இந்த உருளைக்கிழங்கு. இது பூமிக்கு அடியில் விளைகின்ற உணவு பொருள் ஆகும்.
இந்த உருளைக்கிழங்கு தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பயிர்வகை என்று கூறுகிறார்கள். இந்த உருளைக்கிழங்கு பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகள் மூலம் உலகமெங்கும் அறிமுகப் படுத்தப்பட்டது.
அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுவகை பொருளாக உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
மேலும் இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்வதால் மலசிக்கல் வராமல் தடுக்கிறது. உருளைக்கிழங்கு விரைவில் செரிமாணம் ஆகக்கூடிய உணவு பொருளாக இருப்பதால் இது குழந்தைகளின் உணவாக பயன்படுகிறது.
முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காரணம் முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக நச்சுக்கள் அடங்கியுள்ளன. அதனால் இது குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இந்த முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் - 4,
உருளைக்கிழங்கு - ஒன்று,
கேரட் - ஒன்று,
வெங்காயம் - ஒன்று,
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி,
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 2 கப்,
கொத்த மல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உருளைகிழங்கு, கேரட்டை எடுத்துக் கொண்டு அதை நன்கு கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து, பின்னர் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை எடுத்து தோலுரித்துக் கொண்டு பொடியாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். பிறகு அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், கொத்த மல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?
பிறகு பிரெட்டை எடுத்து, ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து பிழிந்து, காய்கறி கலவையை அதில் வைத்து, நீளவாக்கில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.