நம் அன்றாட சமையலில் பருப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. பருப்பு வகைகள் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், சன்னா எனப்படும் கடலை பருப்பும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த பருப்பில் புரதம், கால்சியம், துத்தநாகம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதிலுள்ள கூறுகள் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும், இந்த பருப்பு உங்களின் எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அதே சமயம், கடலை பருப்பு உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த பருப்பு எல்லோருக்கும் நன்மையளிக்காது. சிலருக்கு, பருப்பு சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.
சன்னா தால் ஆரோக்கியத்திற்கு அளவற்ற நன்மை பயக்கும் மற்றும் சுவையாகவும் இருக்கும். ஒரு கப் சனா பருப்பு உங்களுக்கு போதுமான அளவு புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.
நன்கு சமச்சீரான சூப்பர்ஃபுட் என்பதால், சனா பருப்பு இதயம் மற்றும் நீரிழிவு நோய்க்கு உகந்த பருப்பு ஆகும். சனா பருப்பு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது இறைச்சி சாப்பிடாத சைவ உணவு உண்பவர்களுக்கும் சைவ உணவு உண்பவர்களுக்கும் மிக அவசியம். ஆனால், இதை தவிர்க்க வேண்டிய நபர்களும் உள்ளனர். பருப்பு உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆனால், சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது மைதா மாவைக் கொண்டு சு+ப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம்.
மூட்டைப் பூச்சிக்கு பிடித்த நிறம் என்ன? தெரியுமா?
அதிலும் இதனை மாலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. குறிப்பாக பணியாரம் குழந்தை களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவும் கூட. இப்போது இந்த ஆரோக்கியமான கடலைப் பருப்பு இனிப்புப் பணியாரத்தை வீட்டில் இருந்த படியே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
கடலைப் பருப்பு - 2 கப்
மைதா மாவு - 2 கப்
தேங்காய் துருவல் - 1கப்
வெல்லம் - 2 கப் (பொடித்தது)
ஏலக்காய் - 6
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னா; அதனை நன்றாகக் கழுவி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சு+டானதும், தேங்காய் துருவலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பொன்னிற மாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த கடலைப் பருப்பு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !
அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைக ளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
தயாராக வைத்துள்ள உருண்டை களை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும்.
உருண்டை களை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால், கடலைப் பருப்பு பணியாரம் தயார்!!