உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி?





உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி?

0
தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது. மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. 
உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ்
நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது. உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

குறைவான கலோரிகள் கொண்ட தயிரில் நார்ச்சத்து மட்டுமின்றி புரதமும் இருப்பதால், தினமும் இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. தயிரில் நிறைய ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது. 
இது நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றி ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. 
மேலும் தயிர் சாப்பிடுவதால் நம் உடலில் கொலஜன் உற்பத்தி அதிகமாகி இளமை தோற்றத்தை தருகிறது. 

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம்  வகிக்கிறது.

தோலிற்கும், கண் பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது.  

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். 

சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும். சரி இனி கம்பு தயிர் பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தசைப் பிடிப்பு தடுப்பது எப்படி?
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1 கப்

தயிர் – 3 கப்

இஞ்சி – சிறிய துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

ப.மிளகாய் – 3

கொத்த மல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும். கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவை ஊற்றி நன்றாக கிளறி விடவும். 

மாவை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். கூழ் வெந்ததும் இறக்கி ஆறியதும் அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, கரைத்து வைத்துள்ள தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொத்த மல்லி தூவி பருகவும். சுவையான கம்பு தயிர் கூழ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)