நம்மை வாழ வைக்கும் உணவு தத்துவம் தெரியுமா?





நம்மை வாழ வைக்கும் உணவு தத்துவம் தெரியுமா?

0
இன்று தான் உண்ணும் உணவு சரியில்லை என்று கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே தன் மனைவியிடம் கடிந்து கொள்ளும் கணவர்களே அதிகம்.
நம்மை வாழ வைக்கும் உணவு தத்துவம் தெரியுமா?
ஆனால்... முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

இதோ. அப்துல் கலாமின் வார்த்தைகளில், அவரது இளமைக் கால வாழ்க்கை :

நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார். 

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம். சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய். 

ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்ப டுத்தாமல் சாப்பிட்டார். இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை. என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறி யதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய். 

ஆனால் அதற்கு என் தந்தையோ எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும் என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது.
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின், நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லி விட்டு, அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன்.

அப்பா உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..? சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை, என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார். 

மகனே... உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கும் பணிவிடை செய்கிறார.

களைத்துப் போய் இருப்பார். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப் படுத்தப் போவதில்ல. ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும். 

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல. ஆனால் அதற்கு முயற்சிக் கிறேன். இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக் கொண்டது.

நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு சந்தோஷமான மன நிலைக்கு நாம் மாறுவதே. 
அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்த போது அவரது அப்பா மீது, அளவில்லாத மரியாதை எழுந்தது. அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது. ஆம்.
நம்மை வாழ வைக்கும் உணவு தத்துவம் தெரியுமா?
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்ல. ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்.

இந்த தத்துவம் நம் அனைவருக்குமே பொருந்தும். எனவே மனைவியின் உணவை இனி ஒரு போதும் யாரும் குறை சொல்லக் கூடாது. நாம் ஒரு நல்ல மனிதனாக இருப்போம்.
ஊளை சதையா நீங்கள்? இதை படியுங்கள் !
எதிர் காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக் கட்டும். இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)