ஆவாரம் பூ காபி தயார் செய்வது எப்படி?





ஆவாரம் பூ காபி தயார் செய்வது எப்படி?

0
காபியின் வாசனை ஒரு நபரை வசீகரிக்கிறது. இதன் சுவை கசப்பானது என்றாலும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆவாரம் பூ காபி தயார் செய்வது எப்படி?
உலகம் முழுவதும் மக்கள் பெரிய அளவில் காபியை உட்கொள்கின்றனர். பொதுவாக, இது மிகவும் சூடான பானமாகும், ஆனால்  இப்போதெல்லாம் மக்களிடையே  இது குளிர்ச்சியான  பானமாகவும் விரும்பப்படுகிறது. 

காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை மன அழுத்தத்திலிருந்து விடுபட நன்மை பயக்கிறது. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. 

இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். 

இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இது தான். 
சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். 
தேவையானவை

ஆவாரம் பூ பொடி - 2 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கருப்பட்டி - ஒரு டீஸ்பூன்

பால் - 1/2 கப்

செய்முறை
ஆவாரம் பூ காபி தயார் செய்வது எப்படி?
இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி போட்டு கொதிக்க விடவும். பாதியாக சுண்டியதும் வடிகட்டி, பால், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்

செரிமான த்தை சீராக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தீரும். கர்ப்பக்கால சர்க்கரை நோயை விரட்டும். குறிப்பு: ஃப்ரெஷ்ஷான பூ கிடைத்தாலும் பயன் படுத்தலாம்.

ஆவாரம்பூ எப்படி சாப்பிட வேண்டும்?

கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 

வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும். ஆவாரை பூவை குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாக செய்து சாப்பிடலாம்.

குளிர்ச்சி நிறைந்த ஆவாரம் பூக்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் சிறு கட்டிகள் முதல் மூல நோய்வரை அனைத்துக்கும் தீர்வாகிறது.

ஆவாரம் பூக்களை உலரவைத்து பொடி செய்து, சிறிது நீர் விட்டு குழைத்து, புருவத்தின் மீது பூசி வந்தால், உடல் சூட்டினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)