சிக்கன் பாப்கார்ன் ரெசிபி செய்வது எப்படி?





சிக்கன் பாப்கார்ன் ரெசிபி செய்வது எப்படி?

0
உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பவர்கள் கண்ட நொறுக்குத் தீனிகளை முயற்சிப்பதற்கு பதிலாக நாங்கள் கீழே கூறியுள்ள படி பாப்கார்னை சாப்பிட்டால் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும். 
சிக்கன் பாப்கார்ன் ரெசிபி செய்வது எப்படி?
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது வரும் பெரும்பாலானோருக்கு சில வகை உணவுகள் மீது தீராத ஆசை ஏற்படும். 

அதில் முக்கியமானது நொறுக்கு தீனிகள், டயட்டை ஆரம்பித்து ஒருவாரத்திற் குள்ளாகவே சாக்லெட், சிப்ஸ், பிஸ்கட், கேக் என மனசு அலைபாயும். 

அவசரப்பட்டோ, ஆசைப்பட்டோ இதில் சில பீஸ்களை உள்ளே தள்ளினாலும் போது, ஒரு நாள் முழுக்க நீங்க பட்டபாடு வீணாகிவிடும். ஏனென்றால் உடல் எடை குறைப்பில் முக்கியமானதே எடையை சரியாக நிர்வாகிப்பது தான். 

இப்படி கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், நீங்கள் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செலவிட்ட கலோரிகளை அது திரும்ப கொண்டு வந்துவிடும். 

அதற்காக எல்லாம் நொறுக்குத் தீனிகளும் தவறானது என ஒதுக்கிவிடவும் முடியாது. கலோரிகளை கூட்டாத, உடலுக்கு தீங்கில்லாத நல்ல நொறுக்குத் தீனிகளும் இருக்க தான் செய்கிறது. 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பாப்கார்ன் ஒரு சரியான நொறுக்குத்தீனி ஆகும். மசாலா கலவை மற்றும் மிளகாய் சேர்த்து செய்யப்படும் சிக்கன் பாப்கார்ன் மிகவும் ருசியாக இருக்கும். 

குழந்தை களுக்கு மிகவும் பிடித்த இந்த உணவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
250 gms சிக்கன் 

2 மேஜைக் கரண்டி கார்ன் ஃப்ளார்

1 முட்டை

1 கப் ப்ரட் க்ரம்ப்ஸ்

1/4 தேக்கரண்டி உப்பு

3/4 மேஜைக் 

கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1/4 தேக்கரண்டி மிளகு

1/2 தேக்கரண்டி வெங்காய பொடி

3/4 தேக்கரண்டி மிளகாய் தூள்

எண்ணெய்

எப்படி செய்வது 
சிக்கன் பாப்கார்ன் ரெசிபி
ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு, இஞ்சு பூண்டு விழுது, மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நன்கு கலந்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். 

சிக்கனை சிறு துண்டுக ளாக வெட்டி கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும். 
மேலும் அதில் முட்டை அல்லது மோர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த ப்ரட் க்ரம்பில் தொட்டு எடுக்கவும். பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். 

எண்ணெய் சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும். மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். 

பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும். பின் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)