சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் செய்வது எப்படி?





சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் செய்வது எப்படி?

0
டார்க் சாக்லேட் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.  அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் ஆபத்தை குறைக்கும் அதிகரிக்கும் காரணியாகும், எனவே நீங்கள் டார்க் சாக்லேட் சாப்பிட அதிக கொலஸ்ட்ரால் குறையும். 
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி
டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ தமனிகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயோ ஆக்டிவ் கலவையை கொண்டுள்ளது, இதனால் உங்கள் உடலிலுள்ள உயர் ரத்த அழுத்தம் குறையும்.  

அதிகளவில் இல்லாமல் மிதமான அளவில் டார்க் சாக்லெட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் ஆபத்து குறையும்.  

இதனால் இதயத்திற்கும் நன்மையுண்டு.  அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீ என்பது சிறிய தட்டையான பேக் செய்யப்பட்ட ஒரு இனிப்பாகும். 

இதில் வழக்கமாக பால், மாவு, முட்டை மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்க்கப் பட்டிருக்கும். வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள ஆங்கிலம் பேசும் அநேக நாடுகளில் இதற்கான பொதுப்பெயர் பிஸ்கட் என்பதாகும். 

ஆனால் பிற நாடுகளில் குக்கீ மற்றும் பிஸ்கட் ஆகிய இரு பெயர்களும் வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பினும் பல நாடுகளிலும் இரண்டு பெயர்களுமே பயன்படுத்தப் படுகின்றன.

வெண்ணெய், சாக்லேட் சிப்ஸ், சர்க்கரை மற்றும் மைதா சேர்த்து செய்யப்படும் இந்த ருசியான கிருஸ்துமஸ் குக்கீஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

360 gms வெண்ணெய்

620 நாட்டு சர்க்கரை

400 சாக்லேட், உருகிய

1300 சாக்லேட் சிப்ஸ்

6 முட்டை

450 மைதா

100 கோகோ பவுடர்

5 பேக்கிங் பவுடர்
எப்படி செய்வது
பேக்கிங் பவுடர், மைதா மற்றும் கோகோ பவுடர் ஆகிய வற்றை சலித்து கொள்ளவும். ஒரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். 

பட்டர் மற்றும் சாக்லேட் இரண்டையும் உருகி கொள்ளவும். உருக்கிய சாக்லேட்டுடன் இந்த முட்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும். 

அத்துடன் சலித்து வைத்த மாவை சேர்த்து அதனுள் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து கொண்டு 20 நிமிடங்கள் வரை ப்ரிட்ஜில் வைத்திருக்கவும். 
மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மேலும் பேக்கிக் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பரை வைக்கவும். 

கலந்து வைத்துள்ள மாவை இந்த ட்ரேயில் போட்டு சமமாக அழுத்தி கொள்ளவும். 12-15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். வெந்தபின் எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)