சூப்பரான ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா ரெசிபி !





சூப்பரான ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா ரெசிபி !

ஆளி விதை கலந்த நீர், ஓம வாட்டர், லெமன்-தேன் கலந்த பானம் போன்றவை பல காலமாக உடல் எடை குறைப்பிற்காகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பெரும்பாலான மக்களால் பருகப்பட்டு வருகின்றன. 
ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா ரெசிபி
வழக்கமாக இதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக வெண்டைக்காய் நீரும் சேர்ந்துள்ளது.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து வந்த போதிலும், இதிலுள்ள ஊட்டசத்துகள் காரணமாக நம்முடைய டயட்டில் இதையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

வெண்டைக்காய் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கடலை மாவு - ஒரு மேசைக் கரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

மசாலா செய்வதற்கு :
கால் நரம்பு முடிச்சை (வெரிகோஸ் நரம்பு முடிச்சி) எவ்வாறு குணப்படுத்த லாம்?
வெங்காயம் - 2

தக்காளி - 4

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி

வெண்ணெய் - ஒரு மேசைக் கரண்டி

கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை :


வெண்டைக் காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு, சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த வெண்டைக் காயை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். 

 மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
HDL நல்ல கொழுப்பு ஏன்?
வெங்காயம் நன்றாக வதங்கியதம் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும். 

அனைத்து நன்றாக வதங்கியதும் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் பொறித்த வெண்டைக் காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியில் கொத்த மல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.
Tags: