சுவையான வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி?





சுவையான வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி?

0
ஆளி விதை கலந்த நீர், ஓம வாட்டர், லெமன்-தேன் கலந்த பானம் போன்றவை பல காலமாக உடல் எடை குறைப்பிற்காகவும் உடல் ஆரோக்கி யத்திற்காகவும் பெரும்பாலான மக்களால் பருகப்பட்டு வருகின்றன. 
வெண்டைக்காய் மசாலா செய்வது
வழக்கமாக இதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக வெண்டைக்காய் நீரும் சேர்ந்துள்ளது.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து வந்த போதிலும், இதிலுள்ள ஊட்டசத்துகள் காரணமாக நம்முடைய டயட்டில் இதையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
குறைவான கலோரி கொண்ட வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மாக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை நிறைந்துள்ளது. 

வெண்டைக்கய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம் நீர்த்த வடிவத்தில் இந்த சத்துகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கின்றன. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. 

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம், இது மலமிளக்கியாக செயல்பட்டு சீரான இடைவெளியில் மலம் கழிவதற்கு வழிவகை செய்கிறது. சப்பாத்தி இன்றைய உணவு முறையின் கட்டாய உணவாக மாறியுள்ளது. 

அதற்கு என்ன சைட் டிஷ் செய்யலாம் என்பதே பெரும் குழப்பமாக இருக்கும். யோசிக்கவே வேண்டாம். இந்த வெண்டைக்காய் மசாலா செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் அசந்து விடுவார்கள்.
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 250 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் - 1

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 tsp

தக்காளி - 3

மஞ்சள் - 1/4 tsp

மிளகாய் தூள் - 2 tsp

தனியா தூள் - 1 tsp

சீரகத் தூள் - 1 tsp

உப்பு - 1 tsp

தயிர் - அரை கப்

தண்ணீர் - 1 கப்

கரம் மசாலா பொடி - 1/4 tsp

சர்க்கரை - 1/2 tsp

கொத்தமல்லி தழை - சிறிதளவு

கசூரி மேத்தி - சிறிதளவு

செய்முறை : 

வெண்டைக்காயை சுண்டு விரல் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளியை மைய மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகிய வற்றை சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஏன் எடை தூக்கும் பயிற்சி முக்கியமானது?
நன்கு வதங்கியதும், மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் வதக்கிய வெண்டைக் காயை சேர்த்து வதக்கவும்.

நன்கு கொதிக்க விட்டு திக் பேஸ்ட் ஆனதும் கொத்த மல்லி தழை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)