ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் செய்வது எப்படி?





ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

0
நாளுக்கு நாள் இந்தியாவில் டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் செய்வது எப்படி?
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவு, பானங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நீரிழிவு நோயாளியாக வாழ்வது எளிதான விஷயம் இல்லை என்றாலும், அவ்வுளவு சிரமமான காரியம் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.  இதுவொரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். 

பார்லி நீர் இயற்கையாகவே நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. இதில் நம் உடலுக்கு தேவையான பல நண்மைகள் உள்ளன. 
மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது. 

டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட பார்லி நீர் குடிப்பதால், அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

பார்லியில் அதிகளவு நார்சத்து இருக்கின்றது. பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்.. இப்படி கட்லெட்டும் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

வேகவைத்த பார்லி – 1 கப்

ஒட்ஸ் – 1 கப்

எண்ணெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

வதக்கி கொள்ள :

எண்ணெய் – 1 தே.கரண்டி 

கடுகு – தாளிக்க

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கேரட் துருவல் – கால் கப்

பீன்ஸ் – 10

கொத்த மல்லி, புதினா – சிறிதளவு

கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்த மல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்தும் கொள்ளவும். 

வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும். அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். 

அடுத்து கொத்த மல்லி, புதினா தூவி, சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 

(தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும். 

ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். சுவையான சத்தான சத்தான ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)