பார்லி – காய்கறி சூப் செய்வது எப்படி?





பார்லி – காய்கறி சூப் செய்வது எப்படி?

0
குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு.
பார்லி – காய்கறி சூப் செய்வது
உடல்நலம்  சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி.  

மற்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களைத் தவிர, பார்லி நார்ச்சத்து, மெக்னீசியம், செலினியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

மேலும் இது கொழுப்பை சரியான முறையில் ஜீரணிக்க உதவுகிறது. அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறது. 
சிறிதளவு பார்லியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். ஊறிய பார்லியை அப்புறப்படுத்தி விட வேண்டும். 

பார்லி ஊறிய தண்ணீரை மட்டும் தினமும் காலையில் குடித்துவர, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பத்து, இருபது நாள்களில் கிரியாட்டினின் அளவு சீராகும். 
யூரிக் ஆசிட் குறையும். பழுதடைந்த சிறுநீரங்கள் 90 சதவிகிதம் சரியாக வாய்ப்புண்டு. டயாலிசிஸ் சிகிச்சையே தேவைப்படாது. 

என்னென்ன தேவை?

பார்லி – அரை கப்,

கேரட், பீன்ஸ் - ஒரு கப், 

வெள்ளரிக் காய் - ஒரு கப், 

பூசணி – ஒரு கப்,

நறுக்கிய வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி அளவு,

புதினா, கொத்த மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு ,

மிளகு – ஒரு டீஸ்பூன்,

சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்,

அரிசி கழுவிய தண்ணீர் – 4 கப்,

உப்பு – தேவையான அளவு,

எலுமிச்சைப் பழம் – அரை மூடி
எப்படிச் செய்வது?

பார்லியை வெறும் வாணலியில் வறுத்து உடைக்கவும். குக்கரில் பார்லியுடன் காய்கறிக் கலவை, வெங்காயத் தாள், புதினா, கொத்த மல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில் விட்டு இறக்கவும். 
ஆறியதும் மிளகு – சீரகத் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)