நீரிழிவு நோய் இன்று ஒரு பொதுவான நோயாக மாறி வருகிறது. இதனால் ஒருவர் தனது சாதாரண அல்லது அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் கடினமாகிறது.
நீரிழிவு நோயால் அவதிப்படும் மக்களைப் பொறுத்தவரை, எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உணவின் இரத்தச் சர்க்கரையின் அளவையும் அவர்கள் கவனமாக ஆராய வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பல குறிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன.
அவ்வகையில், சில உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும், அதை உங்கள் தினசரி உணவில் சேர்க்கலாம்.
அத்தகைய உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டைக்கடலை. கருப்பு கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல ஆதாரமாக பிரபலமாக அறியப்படுகிறது.
நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான மக்கள் தினமும் காலையில் வேகவைத்த கொண்டைக் கடலையை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
சரி இனி
கருப்பு கொண்டை கடலை பயன்படுத்தி சூப்பரான கருப்பு கடலை சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். என்னென்ன தேவை?
கருப்பு கொண்டை கடலை – 1 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு,
மிளகுத் தூள் – தேவைக்கு,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைத்து, சிறிது கொண்டைக் கடலையை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப் பிலை தாளித்து, அரைத்த கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த கொண்டைக் கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.