சுவையான குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?





சுவையான குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?

0
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை  சமைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. 
சுவையான குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?
அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். 

குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
கண் பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை  உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.

காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும்.  சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு பிழிந்தால் அருமையான சாலட் தயார்.

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

சரி இனி குடை மிளகாய் பயன்படுத்தி சுவையான குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி?  என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை
நறுக்கிய குடை மிளகாய் - 1 கப்,

நறுக்கிய வெங்காயம் - 1 கப்,

தக்காளி - 1 கப்,

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

முந்திரி - 5,

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

சீரகம் - சிறிது,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

கொத்த மல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?
குடைமிளகாய் கிரேவி செய்வது
முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும். 
அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லித் தழையை தூவி இறக்கவும்.

குறிப்பு :

தேவையானால் பனீரை குடை மிளகாய் வதக்கிய பின்பு சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)