சூப்பரான பச்சை பயறு கட்லெட் செய்வது எப்படி?





சூப்பரான பச்சை பயறு கட்லெட் செய்வது எப்படி?

0
பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். 
சூப்பரான பச்சை பயறு கட்லெட் செய்வது எப்படி?
அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் 100 கலோரிகளுக்கு மேல் இருக்காது. மேலும் பச்சை பயறு உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. 

பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். 
எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்பது தெரியுமா? 

ஆம், அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்

முளை கட்டிய பாசிப்பயிறு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

மிளகு பொடி - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

பாசிப்பயிறு கட்லெட்

செய்முறை
வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முளை கட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும்.

அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைத்த மாவை உருண்டை யாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி வைக்கவும்.
பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு - பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை !
அதை பச்சையாகவே சாப்பிடலாம். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த கட்லெட்டு களை போட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான பாசிப்பயிறு கட்லெட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)