இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய 80 சதவீத உணவுகளில் மைதா நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ரொட்டி, பிஸ்கட், புரோட்டா, பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா தான் பிரதானப் பொருளாக உள்ளது.
ஆனால் இதை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரும் போது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணரான நூபுர் பாட்டீலின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும் போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்.
பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதே போன்று மைதாவிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே தான் ஒருமாத காலத்திற்காவது இதை நீங்கள் உணவு முறையில் தவிர்க்கும் போது செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.
எனவே மைதாவை தவிர்ப்பதால்,இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உங்கள் சுவையை தூண்டும் மைதா ரவா பணியாரம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மைதா ரவா பணியாரம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க !
நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட !
தேவையானவை
மைதா மாவு - 200 கிராம்
ரவா - 25 கிராம்
சீனி - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
வாழைப்பழம் - ஒன்று
முந்திரி - 8
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
முதலில் மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். . பின் ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாமாவு, ரவா இரண்டையும் சேர்த்து எடுத்து கலந்துக் கொள்ளவும்.
கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது !இப்பொழுது மிக்ஸியில் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும். அதிகம் அரைத்து விட கூடாது.
அரைத்த வற்றை கலந்து வைத்திருக்கும் ரவா, மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இந்த கலவையில் வாழைப்பழம், சீனி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும்.
பூவம் பழம், ரஸ்தாளி, அல்லது கற்பூரவள்ளி எந்த வகை வாழைப்பழம் வேண்டு மானாலும் சேர்த்து செய்யலாம். கலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்பொழுது ஊறினால் நன்றாக இருக்கும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
இதைப் போல் 5 அல்லது 6 ஊற்றவும். திருப்பி விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவை சேர்ப்பதால் நன்கு மேலே மொறு மொறுவென்று இருக்கும். அதிகம் எண்ணெய் இழுக்காது.