சுவையான பிரெட் சீஸ் பால் செய்வது எப்படி?





சுவையான பிரெட் சீஸ் பால் செய்வது எப்படி?

0
காலை உணவான டோஸ்ட்டில் ஆரம்பித்து, இரவு சாலட்டில் துருவிப் போடுவதுவரை சீஸ் மயமாகி விட்டது. 
இன்றைய வாழ்க்கை. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்கு நாம் பழகி விட்ட காரணத்தாலேயே பர்கர், பீட்சா, பானிபூரி... அனைத்தும் சீஸால் நிறைந்திருக்கிறது. 

நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கும் சீஸின் சுவைக்கு இன்று பலரும் அடிமை. சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். 
ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் (French Fries) போன்ற வறுத்த உணவுகளைவிட சீஸ் மிகவும் ஆரோக்கியமானது. இதை வளரும் பருவத்தினரும் பெரியவர்களும் அளவாகச் சாப்பிடுவதில் தவறில்லை. 

பொதுவாகவே, குழந்தைகளுக்குப் பால் சார்ந்த பொருள்களை அளவுடன் கொடுப்பது வழக்கம். அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிரெட் சீஸ் பால் பிடிக்காத குழந்தைகள் இல்லை. 
இது செய்வதற்கு சுலபமானதும் கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும் போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.

பிரெட் எப்போதும் கிடைக்கும். தேவைக்கு வீட்டில் வங்கியும் வைத்துக் கொள்ளலாம். எனவே என்ன பிரேக்பாஸ்ட் செய்வது என திணறுகிற நேரத்தில் உங்களுக்கு பிரெட் ரெசிபி கை கொடுக்கும். பிரெட் சீஸ் பால் எப்படி செய்வது? எனப் பார்க்கலாம்.

அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4,

கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,

சோள மாவு - ஒரு டீஸ்பூன்,

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,

சீஸ், எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த் தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். 
எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !
கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைக ளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும். இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)