டேஸ்டியான காளான் க்ரீமி சூப் செய்வது எப்படி?





டேஸ்டியான காளான் க்ரீமி சூப் செய்வது எப்படி?

0
சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத் தேர்வுகளில் காளானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. 
டேஸ்டியான காளான் க்ரீமி சூப் செய்வது எப்படி?
காளான் ஃபிரைடு ரைஸ், காளான் பிரியாணி, காளான் மஞ்சூரியன், காளான் 65 என்று இறைச்சியை மையப்படுத்தி அசைவப் பிரியர்கள் என்னவெல்லாம் சாப்பிடுகிறார்களோ, அதே வெரைட்டிகளை சைவர்களும் ருசிப்பதற்கு உதவிகரமாக இருப்பது காளான் ஆகும். 

ரெஸ்டாரண்ட் செல்லும் சமயங்களில் காளான் ஒரு சிறந்த ஸ்டார்டர் உணவுத் தேர்வாக இருக்கிறது. வீடுகளிலேயே காளான் கிரேவி செய்து, பல உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக நாம் பயன்படுத்துகிறோம். 

காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

அது மட்டுமல்லாமல் காளான் மிகுந்த சுவை கொண்டது என்பதால் அதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள தவறுவதில்லை.

சூடான பானம் தரும் புத்துணர்விற்கு ஈடுஇணை தான் ஏது? இதோ நீங்கள் சுவைக்க, நொடியில் சமைக்க சத்தான காளான் சூப் மற்றும், நூடுல்ஸ் சூப். உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணிப் பாருங்கள்!
என்னென்ன தேவை?

பட்டன் காளான் - 100 கிராம்,

கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

கிராம்பு - 2, மிளகுத் தூள்,

உப்பு - தேவைக்கு,

பூண்டு - 5 பல்,

பால் - 200 மி.லி.,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 30 கிராம்,

மல்லித்தழை - சிறிது,

ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
காளான் க்ரீமி சூப் செய்வது
நான்ஸ்டிக் தவாவில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு, கிராம்பைச் சேர்த்து வதக்கி நீளமாக நறுக்கிய காளானைச் சேர்த்து வதக்கவும்.

காளானில் உள்ள தண்ணீர் வற்றி பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கோதுமை மாவை சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும்.
ஆண் எப்போது அழகாகிறான்?
அதனுடன் பால், மிளகு, உப்பு சேர்த்து மிதமான தீயில் சூப்பை லேசாக கொதிக்க விடவும். பால் கொதித்து கெட்டி யானதும் இறக்கவும். சூடு ஆறியதும் ஃப்ரெஷ் கிரீம் கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

கோதுமை மாவிற்கு பதில் கார்ன் ஃப்ளார் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)