உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

0
பனீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம்.
உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது.இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. 

மேலும் இது அருமையான சுவையை கொண்ட ஒரு உணவாக உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் இருவருமே விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாக பனீர் உள்ளது. 

சரி இனி சுவையான உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.  

காபி வெண்டிங் மெஷின் காபி அருந்துவது நல்லதா ?

தேவையான பொருள்கள் :

உருளைக் கிழங்கு - 500 கிராம்

பனீர் துறுவல் - 1 கப்

கோதுமை மாவு - 2 கப்

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி—பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - 1 மேஜைக் கரண்டி

சாட் மஸாலா பொடி (Chat Masala Powder) - 1 தேக்கரண்டி

நெய் - 100 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
செய்முறை :
உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

கோதுமை மாவுடன் உப்புத்தூள், 1 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய், தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து மூடி வைக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்புத் தூள் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும். தனியாத் தூள், சாட் மஸாலாத் தூள் போடவும். பனீர் துறுவல் சேர்த்துக் கிளறவும். 

கொத்த மல்லி இலை போட்டு ஒரு முறை கிளறியதும் இறக்கி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் சிறிதளவு எடுத்து, வட்டகளாகத் தேய்த்துக் கொள்ளவும். 

ஒரு வட்டத்தின் நடுவே உருளைக் கிழங்கு - பனீர் கலவையை வைத்து போளிக்கு மடக்குவது போல மடக்கி, அதன் பின் கையால் தட்டிக் கொள்ளவும். உருளைக் கிழங்கு, பனீர் கலவை வெளியே வந்து விடாமல் கவனமாக செய்ய வேண்டும். 

தோசைக்கல் அல்லது Non Stick Dosa pan ஐ காய வைத்து, செய்து வைத்த பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.

சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம் !

மிதமான தீயில் வைத்து நன்றாக வெந்து, சிவந்ததும் எடுக்கவும். இது போல் எல்லா மாவிலும் பரோட்டாக்கள் செய்து, சிவக்க வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)