வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடேபிள் என்று அழைக்கிறோம்.
மாமிச உணவுகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் எந்த ஒரு நோயும் ஏற்படுவதில்லை என்பதை உணர்த்திய நம் முன்னோர்களை சற்று மறந்தே போய் விட்டோம்.
விலை அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை விட, நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய சில காய்கறி வகைகள் நமக்கு தீவிரமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது.
நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது.
காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும்.
காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது.
சரி இனி காய்கறி கொண்டு அருமையான காய்கறி பிரியாணி செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
பாசுமதி அரிசி - 250 கிராம்
நெய் - 2 டீ ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
எண்ணெய - 3 டீ ஸ்பூன்,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – தலா ஒன்று
புதினா
தயிர் - 4 டீ ஸ்பூன்
வெங்காயம்,
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டீஸ்பூன்
தக்காளி - 3,
பச்சைப் பட்டாணி
பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு கப்
நறுக்கிய கேரட்,
உருளை கிழங்கு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி,
காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.