ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது.
இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது, இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையானப் பொருட்கள் :
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப் பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும் படி கலந்து வைக்கவும்.
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும். பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும் படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கோதுமை ரவை வடை தயார்.