குங்குமப் பூ சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கும் தெரியும். அது சருமத்தை பளபளப்பாக்கும், நோய்க் கொள்ளி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இப்படி பல நன்மைகளை குங்குமப் பூ கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
ஆனால் அது செக்ஸ் உணர்வை நீட்டிக்கச் செய்யும்.. படுக்கையில் நீண்ட நேரம் செயல்பட உதவும் என்பது தெரியுமா..?
ஆம்,
இந்த செய்தியை ஆய்வும் நிரூபித்துள்ளது என்பதே உண்மை. இயற்கை மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் இந்த ஆய்வு வெளியிடப் பட்டுள்ளது.
குங்குமப் பூ செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமன்றி ஆண்குறி விறைப்பு குறைபாடு கொண்டவர் களுக்கும் இயற்கை மருந்தாக இந்த குங்குமப் பூ உதவுகிறது.
இந்த குங்குமப் பூவானது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதே இதற்குக் காரணம்.
அதோடு ஈஸ்ட்ரோஜின், செரோடோனின் மற்றும் மகிழ்ச்சியான உணர்வை தரும் எண்டோர்ஃபின் ஆகிய அமிலங் களையும் சுரக்கச் செய்யும்.
அதே போல் 35 வயதிற்கு மேல் பெண்களுக்குக் செக்ஸ் மீதான நாட்டமின்மை யையும் குறைக்கும் என்கிறது ஆய்வு.
எனவே ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம் வீதம் இந்த குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை உணரலாம்.
உங்களுக்கு அலர்ஜி, உடல் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் சிலருக்கு குங்குமப் பூ அலர்ஜியாக இருக்கலாம். அவர்கள் மருத்துவரின் பரிந்துரையில் பயன்படுத்த லாம்.
எந்தவித நோய் பாதிப்புகளும் இல்லாதோர் பயமின்றி பயன்படுத்த லாம்.
மன்னர்கள் படுக்கைக்கு முன் குங்குமப் பூ பால் குடித்து விட்டு சென்றதற்கும் காரணம் இதுதானோ..!
குங்குமப்பூ எப்படி சாப்பிட வேண்டும்?
அதில் தேன் கலந்து காலையில் குடிக்கலாம். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதற்கு முன், நீங்கள் உங்கள் உணவியல் நிபுணரை அணுக வேண்டும்.
குங்குமப்பூவைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் தரத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம். சந்தையில் குங்குமப்பூவின் பல குணங்கள் உள்ளன.
குங்குமப்பூ சாப்பிட்டால் என்ன பலன்?
மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது. குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது.
ஆனால அதனை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை போன்றவை ஏற்படும்.
காஷ்மீரி குங்குமப்பூ விலை உயர்ந்தது. 1 கிலோ தரமான காஷ்மீரி குங்குமப்பூவின் விலை சுமார் $2900.
Tags: