சுவையான வாழைத்தண்டு பச்சடி செய்வது எப்படி?





சுவையான வாழைத்தண்டு பச்சடி செய்வது எப்படி?

0
வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத் தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. 
சுவையான வாழைத்தண்டு பச்சடி செய்வது எப்படி?
இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம். 

வாழைத்தண்டு சிறுநீர்ப்பாதை மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்த இயற்கை உணவு. வாழைத்தண்டு வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளது.
சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற கூடும். 

இதை அவ்வபோது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. 

சிறுநீரக கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு முதன்மையாக செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இன்றைய காலத்தில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது தான். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவ்வபோது வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் அவதிப் படுகிறார்கள். 
அமிலத் தன்மையுடன் உங்களுக்கு அடிக்கடி பிரச்சனைகள் இருந்தால் இந்த வாழைத்தண்டு சாறு உடலில் அமிலத்தன்மை அளவை கட்டுப்படுத்த செய்யும். 

அமிலத்தின் சமநிலையை மீட்டெடுக்க உதவக்கூடும். மேலும் அமிலத் தன்மையால் நெஞ்செரிச்சல் மற்றும் அசெளகரியம், வயிறு எரியும் தன்மை போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்க செய்கிறது. 

சரி இனி சுவையான வாழைத்தண்டு பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி - நண்பர்கள் வெறிச்செயல் !
தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், 

சீவிய வெல்லம் – அரை கப்,

துருவிய தேங்காய் – கால் கப்,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – சிட்டிகை.

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – ஒன்று,

எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
சுவையான வாழைத்தண்டு பச்சடி செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெய் விட்டு வாழை தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். 
வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பச்சடி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)