உணவில் சேர்க்க கூடாத மீன் வகைகள் !





உணவில் சேர்க்க கூடாத மீன் வகைகள் !

0
மீன்கள் உடல் ஆரோக்கி யத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரு க்குமே தெரியும். வாரம் ஒரு முறை தவறாமல் மீனை சேர்த்துக் கொள்ளுங்கள் என பல மருத்துவர்களும் பரிந்துரைக்கி றார்கள்.
உணவில் சேர்க்க கூடாத மீன்

ஏனெனில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தத் தேவையான அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் அனைத்தும் மீன்களில் ஏராளமான அளவில் உள்ளது.
திருஷ்டி கழிக்கும் கல் உப்பு அறிவியல் உண்மை !
அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது.

எனினும், சில வகை மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்று கூறுகிறார்கள். அவற்றைப் பற்றி இனிக் காண்போம்.....

கானாங்கெளுத்தி
கானாங்கெளுத்தி
கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது தான் எனிலும், இதில் உள்ள அதிகளவு பாதரசம் உடலுக்கு தீய தாக்கத்தை விளைவிக்கக் கூடியது ஆகும்.

விலாங்கு மீன் 

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன் அதிகளவு சாப்பிடுவது உடலுக்கு அபாயகர மானது.
விலாங்கு

இதிலிருக்கும் அதிகப் படியான பாலி குளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைக் கொண்டவை.
ஒரு உயிர் உருவாகும் ரகசியம் தெரியுமா?
வாளை மீன்

வாளை மீனிலும் அதிகளவு பாதரசம் இருக்கிறது. ஒரு வாளை மீனில் 976 ppm (Parts per million) பாதரசம் அளவு இருக்கிறது.
வாளை மீன்
அதிகளவு இது உடலில் சேரும் போது மூளையின் செல்களை இது சேதமடைய செய்கிறது. எனவே, அளவாக உண்ணும் பழக்கத்தை கடை பிடியுங்கள்.

சூரை மீன் 

நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இரண்டு வகையான சூரை தான் உடலுக்கு கேடு விளை விக்கின்றன.
சூரை மீன்
வாளை மீனுக்கு அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு கொண்டுள்ள மீன் இதுவாகும்.

சால்மன் மீன்
சால்மன் மீன்

சில வகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரிக்க காரணியாக இருக்கிறது. அதிகளவில் இதை உட்கொள்வது உடல் நலனுக்கு அபாயமாக மாறலாம்.
காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !
சுறா மீன் 
சுறா மீன்
பால் சுறா போன்ற ஒருசில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது. மேலும் இதிலும் பாதரசம் அதிகளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

குறிப்பு -

இந்த ஆறு மீன்களையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மரணம் ஏற்படும் எனவும் ஆய்வில் கூறப்படு கின்றது
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)