ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் முட்டைக்கோஸை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை.
இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி விளக்கி உள்ளார்.
முட்டைக்கோஸில் அடங்கி இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் (sulforaphane), குறிப்பாக இதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது.
sulforaphane கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸ்-க்கு கலரை கொடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸாக இருக்கின்றன அந்தோசயனின்ஸ் (Anthocyanins).
இவை கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே உருவான கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முட்டைக்கோஸில் இருக்கும் பலவிதமான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுகின்றன.
க்ரஷ் செய்யப்பட்ட முட்டைக்கோஸ் இலைகள் போலந்து நாட்டின் நாட்டு மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றாக இருக்கிறது.
முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகளில் காணப்படும் சல்ஃபோராஃபேன், கேம்ப்ஃபெரால் மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இவற்றின் அழற்சி எதிர்ப்பு விளைவுக்கு காரணமாக இருக்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தவணை முறையில் மனை வாங்குவது சரியா?
தாளிக்க:
பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
பச்சை மிளகாய் - 4,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 1 பல்.
செய்முறை :
முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி யையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையை யும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
சுவையான கோஸ் குருமா ரெடி.