சுவையான கேரட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





சுவையான கேரட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

0
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.
கேரட் துவையல் செய்வது
கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 
அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.  அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். 

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவற்றில் உள்ள பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைக்கிறது. இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. 
மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது. நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக் கொண்டால் மரபணு பாதிப்புகள்,

உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடும் போது பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது. 

மேலும், வாயில் இருக்கும் கிருமிகள் போகவும், பற்களுக்கு நல்ல பலம் கிடைக்கவும் இவை உதவுகின்றன.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காய்கறியில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான துவையல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?

கேரட் துருவல் - 1 கப்,

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

விரும்பினால் நறுக்கிய இஞ்சி - சிறிது.

எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய வைத்து கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும். 
ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)