சூப்பரான முந்திரி சிக்க‌ன் குருமா செய்வது எப்படி? #Kuruma





சூப்பரான முந்திரி சிக்க‌ன் குருமா செய்வது எப்படி? #Kuruma

0
முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயாமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள்  அடங்கியுள்ளன.
சூப்பரான முந்திரி சிக்க‌ன் குருமா செய்வது எப்படி?
முந்திரியில் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டாபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து  இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது.
 
முந்திரியை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம். இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள்  உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற்செயல் பாட்டுக்கும் உதவுகிறது. 
முந்திரியில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது.

1 அவுன்ஸ் பச்சை முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது நம்மளுக்கு அதிகளவில் உடல் எடை கூட வாய்பில்லை. 

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்க  என்கிறார்கள்.
 
மற்ற வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை.  

பெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவு பெண்கள் தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள்  வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:

கோழிக்க‌றி -1 கிலோ

வெங்காய‌ம் -4

த‌க்காளி -4

ஏல‌க்காய் -3

சோம்பு-1 தேக்க‌ர‌ண்டி

க‌ருவேப்பிலை- கொஞ்ச‌ம்

ம‌ல்லித்த‌ழை -1 கைப்பிடி

உப்பு -தேவையான‌ அளவு

மிளகாய் தூள் -2 ஸ்பூன்

ம‌ஞ்ச‌ள் தூள் -1/2 டீஸ்பூன்

ப‌ச்சை மிள‌காய் -4

தேங்காய் துருவ‌ல் -1 1/2 க‌ப்

முந்திரிப் ப‌ருப்பு -50 கிராம்

எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம் -1

இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்

ம‌ல்லித்தூள் -2 ஸ்பூன்

ப‌ட்டை -1

ல‌வ‌ங்க‌ம்- 2
தவணை முறையில் மனை வாங்குவது சரியா?
செய்முறை:
முந்திரி சிக்க‌ன் குருமா செய்வது
கோழிக்க‌றியை சிறு துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவ‌ல், மிள‌காய், சோம்பு இவைகளை அரைத்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், ஏல‌க்காயை போடவும். 
இதனுடன் நறுக்கிய வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், த‌க்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய் தூள், ம‌ல்லித்தூள், ம‌ஞ்ச‌ள் பொடியையும் சேர்த்து வதக்கவும். 

இப்பொழுது கோழிக் க‌றியை கடாயில் போட்டு மிதமான தீயில் வேக விடவும். இதனுடன் அரைத்த தேங்காய் க‌ல‌வை, முந்திரி விழுது, க‌ருவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கவும். பிறகு த‌ண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க‌ வைக்கவும். 

இப்பொழுது குருமாவில் எலுமிச்ச‌ம் ப‌ழ‌த்தை பிழிந்து விட்டு ம‌ல்லித் த‌ழையை ந‌றுக்கித் தூவி இறக்கினால் சுவையான முந்திரி சிக்கன் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)