காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இது மிக மிக கலோரி குறைந்த ஒரு காய்கறியாகும். எனவே எல்லா எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் காலிஃபிளவரை பலரும் சாப்பிடலாம்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கூறப்படும் அளவுக்கு காலிஃப்ளவர் சாப்பிடுவதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
க்ருசிஃபெராஸ் காய்கறிகள் என்ற காய்கறிகளின் வகையை சேர்ந்த காலிஃப்ளவரை அதிகமாக சாப்பிட்டால் பிரச்னைகள் ஏற்படலாம்.
தைராய்டு சுரப்பியால் உடலுக்கு தேவையான அளவுக்கு தைராய்டு ஹார்மோனை சுரக்க முடியவில்லை என்ற நிலை தான் ஹைப்போ தைராய்டு என்று கூறப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப் படுகின்றனர். ஹைப்போ தைராய்டு இருந்தால் வளர்சிதை மாற்றம் மிகவும் குறைந்து விடும்.
எனவே நாள் முழுவதும் சோர்வாக இருப்பீர்கள். காலிஃபிளவர் முட்டைகோஸ் உள்ளிட்ட ஒருசில உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இன்னும் மந்தமாக்கி விடும்.
சரி இனி
காலிஃப்ளவர் பயன்படுத்தி டேஸ்டியான காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?என்று இந்த பதிவில் கண்போம். தேவையானவை:
காலிஃப்ளவர் – 11/2 கிண்ணம் நறுக்கியது
வெண்ணெய் – 5 கிராம்
வெங்காயம் நறுக்கியது – 1
காய்ச்சிய பால் – அரை கப்
மிளகுத் தூள் – கால் ஸ்பூன்
சோள மாவு – 11/2 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
பாதி காலிஃப்ளவரை அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரஷர் பானில் சிறிது வெண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயம், காலிஃளவர் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். அத்துடன் ஒரு கப் பால், சிறிது உப்பு சேர்க்கவும்.
பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை தேக்கரண்டி சோள மாவைக் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.
சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.