உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாஸ்தா விரும்பி சாப்பிடப்படுகிறது. அதற்கு இதன் சுவையும், எளிமையான செய்முறையுமே காரணம். ஆனால் பாஸ்தா சாப்பிடுவதை சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
ஒரு வேளை நாம் சமைக்கும் முறையில் ஏதாவது தவறு இருக்கிறதா? பாஸ்தா உணவிற்கு கார்போ ஹைடரேட்டோடு தொடர்பு இருப்பதால் பலரும் இதை சாப்பிட தயங்குகிறார்கள்.
ஆனால் சரிவிகித உணவில் பாஸ்தாவை சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என உலகமே ஒத்துக் கொண்டுள்ளது. பாஸ்தாவை அளவாக உட்கொண்டால், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாகவே எடுத்துக் கொள்வோம்.
இதனால் தேவையின்றி உடல் எடை அதிகரிப்பது ஒழுங்குப் படுத்தப்படும். பாஸ்தா உணவு ஆரோக்கியமற்றது என்று சொல்லப்பட்டு வரும் பொய்யை உடைக்க வேண்டிய நேரமிது.
பாஸ்தா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரியமான பாஸ்தா, மைதா மாவில் தயாரிக்கப் படுகிறது. இதில் கார்போஹைடரேட்டும் புரதமும் சேர்ந்தே இருக்கின்றன.
எனினும் இன்று கடைகளில் முழு கோதுமை பாஸ்தா முதல் சுண்டல் பாஸ்தா வரை பல வகைகளில் கிடைக்கிறது. இதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது.
சுவை மற்றும் வடிவத்தை வைத்தே ஒருவர் பாஸ்தாவை தேர்ந்தெடுத்த போதும், நம்முன் இவ்வுளவு வகையான பாஸ்தாக்கள் இருக்கும் போது நமக்கான பாஸ்தாவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் - 1/2
கிலோ வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு (வாசனைத் தூள்) - 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீ ஸ்பூன்
செய்முறை:
மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
அதில் தக்காளி, பின்னர் எல்லாத் தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.
குறிப்பு:
மக்ரோனியில் உப்பு சேர்த்திருப்ப தால் சிக்கனில் தேவைக்கு மட்டும் சேர்க்கவும். விருப்பப் பட்டால் பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து பரிமாறலாம்.
மட்டனுக்கும் இதே செய்முறை தான். ஆனால் குக்கரில் மட்டனை அவிக்க வேண்டும். விருப்பப் பட்டால் புதினா, கொத்தமல்லி சேர்க்கலாம்.