டேஸ்டியான கொண்டைக்கடலை சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான கொண்டைக்கடலை சட்னி செய்வது எப்படி?

0
கொண்டைக் கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
டேஸ்டியான கொண்டைக்கடலை சட்னி செய்வது எப்படி?
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது. 

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோ போரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். 
மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும். வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. 

இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது. 

சரி இனி கொண்டைக்கடலை பயன்படுத்தி டேஸ்டியான கொண்டைக்கடலை சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையானவை :

கொண்டைக்கடலை - அரைகப். முதல் நாளே வெறும் வாணலியில் கடலையைச் சிவக்க வறுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி - ஒரு துண்டு

தேங்காய்த் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சைக் கொத்தமல்லி - சிறிது

தயிர் - ஒருகப்

தாளிக்க - ஒரு ஸ்பூன் எண்ணெய்

கடுகு - சிறிது

பெருங்காயம் - சிறிது

ருசிக்கு - உப்பு

பிடித்தமான ருசிக்காக புதினா, வெங்காயம் போன்றவைகளும், சிறிது வதக்கி சேர்க்கலாம்.
செய்முறை :
கொண்டைக் கடலை சட்னி செய்வது
தயிரைக் கடைந்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை வடிக்கட்டி உப்பு, மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்த மல்லி சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொண்டு கடைந்த தயிரில் கலக்கவும். 
எண்ணெயில் கடுகு, பெருங்காய த்தைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும். வாஸனைக் காக சேர்ப்பதை அரைக்கும் போதே சேர்த்து விடவும்.

சைட்டிஷ்ஷாக உபயோகிக்க நன்றாக இருக்கும். காரம் அதிகமாக்க தாளித்துக் கொட்டும் போது மிளகாய் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)