டேஸ்டியான சில்லி ஃபிஷ் ரெசிபி செய்வது எப்படி?





டேஸ்டியான சில்லி ஃபிஷ் ரெசிபி செய்வது எப்படி?

0
பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு ஆரோக்கியமாக இருந்தாலும் அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. 
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

முள் அதிகம் இல்லாத மீன், சோயா, தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இண்டோ -ஃப்யூஷன் ரெசிபி மொரு மொருப்பாகவும், ஸ்பைசி யாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்

250 கிராம் மீன்

1/2 கப் மைதா

1/2 கப் சோள மாவு

1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

2 தேக்கரண்டி சோயா சாஸ்

2 மேஜைக்கரண்டி செலரி, பொடியாக நறுக்கப்பட்ட

1 தேக்கரண்டி மிளகு

உப்பு

எண்ணெய்

for garnishing ஸ்ப்ரிங் ஆனியன்

சாஸ் தயாரிக்க:

1 மேஜைக் கரண்டி இஞ்சி, நறுக்கப்பட்ட

1 மேஜைக் கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட

1 மேஜைக் கரண்டி பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட

4 மேஜைக் கரண்டி சோயா சாஸ்

5 மேஜைக் கரண்டி டொமேடோ சாஸ்

1 மேஜைக் கரண்டி சில்லி சாஸ்

1 மேஜைக் கரண்டி சோள மாவு
300 பெண்களை ஏமாற்றியவரை சிக்க வைத்த ஒரே புகார் !
எப்படி செய்வது

மீனை துண்டாக வெட்டி கொள்ளவும். ஒரு பௌலில் சோள மாவு, மைதா, பேக்கிங் பவுடர், சோயா சாஸ், மிளகு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெட்டி வைத்த மீனை மசாலா கலவையில் தொட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

சாஸ் தயாரிக்க:

அடுப்பில் தவா வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் டொமேடோ சாஸ் சேர்த்து கிளறவும்.

அத்துடன் சோளமாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும். கொதி நிலை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதில் மூங்கில் பாட்டில் !
மீனை பரிமாறும் போது அதன் மேல் இந்த சாஸை ஊற்றி பரிமாறவும். இறுதியாக அதன் மேல் நறுக்கி வைத்த ஸ்ப்ரிங் ஆனியனை தூவி அலங்கரி க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)