தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி செய்வது எப்படி?





தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி செய்வது எப்படி?

0
தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போ கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும்.
தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி செய்வது
தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம்.

ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. 

தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. 

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. 
செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. சரி இனி தேங்காய்ப்பால் கோஃப்தா பயன்படுத்தி தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:
பாசுமதி - 2 கப்,

தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

பெரிய வெங்காயம் - ஒன்று,

மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு. கோப்ஃதா தயாரிக்க:

துருவிய பனீர் - கால் கப்,

வேக வைத்த உருளைக் கிழங்கு - கால் கப்,

உடைத்த முந்திரித் துண்டுகள் - 10,

சோள மாவு - கால் கப்,

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை,

துருவிய கேரட் - தலா 3 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவை யான அளவு,

உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க:

புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை கப்,

தக்காளி - ஒன்று,

பச்சை மிளகாய் - 3,

பட்டை சோம்பு கசகசா (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
கோஃப்தா தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து உருண்டை களாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... 
இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அரைத்த மசாலா விழுது சேர்க்கவும். 

ஊறிய பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து ஒன்றரை கப் தேங்காய்ப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும். 

ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக் களைச் சேர்த்துக் கிளறி விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)