அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பாதாம் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பருப்புகளில் ஒன்றாகும்.
இந்த கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
பாதாம் சாப்பிடுவது இரத்த சிவப்பணுக்களில் (RBCs) வைட்டமின் E அளவை அதிகரிக்கிறது, கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுக்க ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை அளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன.
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் கொட்டைகள் நிறைந்த உணவுகள் இருதய நன்மைகளைத் தருகின்றன.
மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள்.
இந்த க்ரீமி ரிச் பாதாம் சூப்பில் புரதம் நிறைந்திருக்கிறது. இதனை எப்படி எளிமையாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
800 மில்லி லிட்டர் வெஜிடபிள் ஸ்டாக்
200 மில்லி லிட்டர் ஸ்கிம்டு மில்க்
100 gms வறுத்த பாதாம்
50 gms வெண்ணெய்
50 gms மைதா
சுவைக்க உப்பு மற்றும் மிளகு
ஒரு சிட்டிகை ஜாதிக்காய், துருவிய
2-3 துளிகள் பாதாம் எசன்ஸ்
10 gms வறுத்த பாதாம்
எப்படி செய்வது
ஒரு அடிகணமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருக்கி கொள்ளவும்.
அத்துடன் மைதா மற்றும் பால் சேர்த்து இடைவிடாமல் கலந்து கொள்ளவும்.
அதில் பொடித்த பாதாமை சேர்த்து கலந்து வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும்.
அத்துடன் தாளித்து வைத்த வற்றை சேர்த்து, வறுத்த பாதாமையும் சேர்த்து சூடாக பரிமாறவும்.