க்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி | Cream of Celery Soup Recipe !





க்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி | Cream of Celery Soup Recipe !

0
புரோட்டீன் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A, B, C போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கி யிருப்பதால் தான், மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது. 
க்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி
செலரியில் கிட்டத்தட்ட 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. மக்னீசியமும், இரும்புச்சத்தும் சற்று அதிகமாக உள்ளது, செலரியின் பிளஸ் பாயிண்ட்டாகும். 

நம்முடைய இதயம் சிறப்பாக செயல்படவும், இதயத்திற்கு செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்கவும் பெருமளவு தேவைப்படுவது மக்னீசியம் தான். 

இந்த செலரியில் மக்னீசிய உப்புகள் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நன்மை தருகிறது. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் முன்கூட்டியே தடுக்கப் படுகின்றன.

அதேபோல ஹீமோகுளோபின் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த செலரி கை கொடுக்கிறது.. ரத்தசோகை, லூகேமியா போன்ற பிரச்சனையும் உடனே தீர்கிறது. 

ரத்த விருத்தியும் அதிகமாவதுடன், தாது உப்புக்களால் ரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டு விடுவதும் முன்கூட்டியே தடுக்கப் படுகிறது. இதனால், ரத்தத்தில் நச்சுப் பொருட்களும் சேர்வதில்லை.

தேவையான பொருட்கள்

செலரி 1 கப் , நறுக்கப்பட்ட

வெண்ணெய் 2 மேஜைக் கரண்டி

ஸிஃப்டட் மாவு 2 மேஜைக் கரண்டி

மிளகு தூள் ¼ மேஜைக் கரண்டி 

பால் ¾ கப்

ஸ்டாக் 4 கப்

உப்பு தேவையான அளவு

க்ரீம் சிறிதளவு

எப்படி செய்வது 

செலரியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு அடிகணமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 

எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த செலரியை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மாவு மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

அடுப்பை அணைத்து விட்டு, அதில் ஸ்டாக் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். 

நன்கு கலந்த பின் அந்த பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பத்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். பின் அதனை அலங்கரிக்க ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)