தால் பான் கேக் செய்வது எப்படி?





தால் பான் கேக் செய்வது எப்படி?

0
பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. 

இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது. பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. 
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. 

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

தேவையானவை:

பாசி பருப்பு- 1 கப்

பச்சை மிளகாய்- 2

இஞ்சி-1 துண்டு

சமையல் சோடா- 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - தேவையான அளவு

கொத்தமல்லி தூள்- சிறிதளவு

மஞ்சள் தூள்-சிறிதளவு

உப்பு. தேவையான அளவு

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 2

பெரிய குடைமிளகாய்- 1

ஸ்வீட் கார்ன்- அரை கப்

செய்முறை:
தால் பான் கேக் செய்வது

முதலில் பாசிப் பருப்பை நன்கு கழுவி, தண்ணீரில் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு, அதை மீண்டும் கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். 

அடுத்து பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் தேவைக்கேற்ப ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கலாம்.

அடுத்து, இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் பேக்கிங் சோடா, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். 

இதை நன்கு கலக்கவும். இதில் சில காய்கறிகளை சேர்த்து கலக்கலாம். இப்போது மாவு பதத்தில் இருக்கும். இந்நிலையில் அடுப்பி நான்-ஸ்டிக் தோசை கல் வைத்து 1 கரண்டி மாவு ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றவும்.
இருபுறமும் வேக வைத்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும். அவ்வளவு தான், சுவையான ஆரோக்கியமான மூங் டால் பான் கேக் (Moong dal pan cake) ரெடி. இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ட்ரை செய்து பாருங்க.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)