பைத்தானம் என்பது பாசிப் பருப்பில் செய்யப்படும் ஒரு வகை குழம்பு (ஆணம்). காயல் பட்டினத்தின் பாரம்பரிய உணவுகள் மணத்திற்கும், ருசிக்கும் மட்டுமல்லாமல் ஆரோக்கி யத்திற்கும் பெயர் பெற்றவை.
தேங்காய் சோறு, மருந்து சோறு, காய மருந்து, வாயு கஞ்சி என சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் காய்கறிககள் இல்லாத நேரத்தில் அவசர சமையலு க்கு கை கொடுப்பது பருப்பும் முட்டையும் தான்.
இதை பத்திய உணவு என்றும் சொல்லலாம். வாத நீர், சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர் களுக்கு தக்காளியை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்து வார்கள்.
ஆனால் சாம்பாரில் தக்காளி சேர்க்காமல் நல்லா இருக்காதேனு நமக்கு சலிப்பு தட்டும். ஆனால் பைத்தானம் நல்லா இருக்குமே…
பைத்தானத் திற்கு கொத்த மல்லி சட்னி எ கூட்டு உணவாக நாம் எடுத்துக் கொண்டாலும் இரண்டுமே தனித்தனி மருத்துவ குணங்கள் உடையது.
பாசி பருப்பு அதிக புரோட்டின் சத்து நிறைந்தது. கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. பொட்டாசியம், கால்சியம், விட்டமின்கள் றைந்தது. செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது.
பூண்டு நோய் எதிர்ப்பு க்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தை தூய்மை படுத்துகிறது. இதய நோய்களி லிருந்து பாதுகாக்கிறது. வாயு தொல்லை மற்றும் அஜீரண கோளாறை நீக்குகிறது.
இன்னும் ஏராளம். தினமும் பூண்டை அளவோடு உணவில் சேர்த்து வந்தாலே நோய்கள் அண்டாது. கொத்த மல்லி சட்னி மட்டும் மருந்துக்கு குறைவா என்ன… தலை சுற்று, பித்தத்திற்கு மல்லி சட்னி மிகவும் நல்லது.
கொத்த மல்லியில் அதிக அளவு விட்டமின்கள், சுண்ணாம்பு, இரும்பு சத்து இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம், வாந்தி, இரத்த அழுத்தம் போன்ற வற்றை நீக்கும்.
கொத்த மல்லியை கர்ப்பிணிகள் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. கருச்சிதை விற்கு வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின் றதாம்.
கறிவேப்பிலை பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே.பட்டியலிடவே முடியாது.
“கறிவேப்பிலையோ வேப்பிலை காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை”
என்ற சொல்லே உண்டாம்.இந்த தாய்ப்பிள்ளை நம் தலையை காக்கும் என அனைவரும் அறிந்ததே. தலை முடியை சொன்னேங்க..
இனி செய்முறை பாரக்கலாம். செஞ்சாதானே சாப்பிட முடியும். செஞ்சிடுவோம்…
தேவையான பொருட்கள் :-
பாசி பருப்பு -200 கி
துவரம் பருப்பு -50 (விருப்பப் பட்டால் )
முட்டை – 3
பூண்டு – 6 – 7
காய்ந்த மிளகாய் – 2 – 3 (தேவைக்கு )
சீரகம் – 1 tsp
கறிவேப்பிலை- கொஞ்சம்
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு – தேவைக்கு
தாளிக்க:-
எண்ணெய் – சிறிதளவு
சின்ன வெ ங்காயம்- 3,4
கறிவேப்பிலை
செய்முறை:-
பாசி பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் பருப்பை அலசி முட்டை தவிர மற்ற பொருட்களை குக்கரில் போட்டு நன்கு மசிய வேக விடவும்.
வெந்ததும் குக்கரை திறநது தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து நன்க மசிக்கவும்.
தாளிப்பு பொருட்களை தனியாக தாளித்து பருப்பில் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் முட்டையை உடைத்து ஊற்றி முட்டை வேகும் வரை வேக விடவும்.