சுவையான சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?





சுவையான சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

0
கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். 
சுவையான சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?
இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். 

அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.  

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 
கோழிக்கறியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதம், கலோரிகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. 

இவை, நம் உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களின் சரியான அளவை வழங்குகிறது. எனவே, தினசரி போதுமான அளவு சிக்கனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் :

கோழி கறி – 200 கிராம்,

மஞ்சள் தூள் – 5 கிராம்,

மிளகாய்த்தூள் – 10 கிராம்,

மல்லித்தூள் – 10 கிராம்,

கரம் மசாலா – 5 கிராம்,

தயிர் – 10 கிராம்,

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,

மிளகுத்தூள் – 10 கிராம்,

இஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்,

எண்ணெய் – தேவைக்கேற்ப,

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 1 கொத்து,

பச்சை மிளகாய் – 2.
செய்முறை :
கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள், தயிர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் .

இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு தவாவில் எண்ணை சேர்த்து சிக்கன் துண்டுகளை இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேக விடவும். 

சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அதன் நடுபாகத்தில் சிறிதாக துளையிட்டு அதில் பச்சை மிளகாயை வைத்து வேக விடவும். 

பச்சை மிளகாய் வெந்ததும் அதன் சாறு சிக்கனுள் இறங்கி, அதன் சுவை வித்தியாச மானதாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)