உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி?





உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி?

0
ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள், சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கோதுமை போன்றதொரு முழு தானியம் ஆகும். முழு தானிய வடிவில், இது குதிரைகளுக்கு உணவாக பயன்படுகிறது. 
ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது
இதை நன்றாக இடித்து, பதப்படுத்தினால் அது மனிதர்களுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. ஓட்ஸ் தானியத்தை, பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஓட்ஸ் உணவு தயார். 
ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. 

ஓட்ஸ் உணவை கொண்டு இட்லி, தோசைகள், ஊத்தப்பம்கள், குக்கீஸ், கேக்குகள், ஸ்மூத்திகள் உள்ளிட்டவைகளை தயாரிக்க பயன்படுகிறது. 100 கிராம் ஓட்ஸில், 389 கலோரி சக்தி உள்ளது. 

ஓட்ஸில் நம் உடலுக்கு தேவையான, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன. 

ஒரு கோப்பை ஓட்ஸ் உணவில், நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் புரதங்கள் உள்ளன. ஓட்ஸ் உணவில், பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையத்தக்க நார்ச்சத்து உள்ளது. 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தக்க வகையிலான பீட்டா குளுகானை எளிதில் உறிஞ்சத்தக்க ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

உடலில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க ரத்த வெள்ளை அணுக்களுக்கு துணை நிற்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பல வழிமுறைகளை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிப்பார்கள். 

அப்படி உடல் எடையை வேகமாக குறைக்க உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு அற்புதமான டயட் முறை தான் இந்த ஓட்ஸ் டயட்.  
இதன் மூலம் உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்க முடியும். ஓட்ஸ் உலகம் முழுவதும் பலராலும் அதிகம் உண்ணப்படும் பிரபலமான காலை உணவு. 

ஏனென்றால் இது காலையில் சமைக்க எளிதானது மேலும் பல வழிமுறைகளில் இதை சமைத்து சாப்பிடலாம். 

நீங்கள் இதை ஜூஸ், மில்க் ஷேக், கஞ்சி போன்று பல வழிகளில் பயன்படுத்தலாம். டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஓட்சை இப்படியும் செய்து சாப்பிடலாம். 

சரி ஓட்ஸ் முட்டை கொண்டு உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 கப் கோதுமை மாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து 

தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)