தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.
உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
சரி இனி தக்காளி கொண்டு ருசியான தக்காளி குருமா செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க :
தேங்காய் – 2 பத்தை
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10
தாளிக்க :
கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்
செய்முறை :
அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
தக்காளி, கொத்த மல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.
கொத்த மல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான தக்காளி குருமா ரெடி.
இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.