தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும்?





தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும்?

0
சப்பாத்தி தான் இன்றைய நாளில் பல வீடுகளில் இரவு உணவாக மாறி யிருக்கிறது. ரொட்டியின் வகையைச் சேர்ந்த இந்த சப்பாத்தியைத் தான் மருத்துவர்களும் சாப்பிடுவதற்கு பரிந்துறை செய்து வருகின்றனர்.
சிறந்த டையட்
ஏனென்றால், இதில் நம் உடலுக்கு அதிமுக்கியம் தேவையான வைட்டமின் B,E, மினர்ல்கள், காப்பர் ஸிங்க், ஐயோடின், சிலிகான், 

பொட்டாசியம் மற்றும் கால்சியம், மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கி யிருக்கின்றன. 

இது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் இது அனைத்து விதமான கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். 

முக்கியமாக சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம். மேலும் தற்போது நிறைய பேர் சப்பாத்தியை தங்கள் அன்றாட உணவில் சேர்த்து வருகிறார்கள்.

குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தியை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள்.
இத்தகைய சத்துக்கள் நிறைந்த கோதுமை மாவால் செய்த சப்பாத்தியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம் வாருங்கள்..

சருமத்திற்கு நல்லது :

சப்பாத்தியில் உள்ள ஸிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் போது தானே சருமமும் ஆரோக்கியம் பெறும்.

ஹீமோ குளோபின் அளவைப் பாதுகாக்கும் :

உடலுக்கு ஹீமோ குளோபினை அளிப்பது இரும்புச் சத்து தான். அது சப்பாத்தி யில் அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோ குளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.

சிறந்த டையட்:
தினமும் சப்பாத்தி
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்தி தான் சிறந்த டயட் ஆகும். 

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது:
கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறு சுறுப்பும் அளிக்கின்றது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கின்றது.

உடல் எடையைப் பாதுகாக்கும் :
இது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம். 

அதே போல் சப்பாத்தி உண்டால் நீண்ட நேரம் பசியும் எடுக்காது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)