முளைகட்டிய காராமணி கிரேவி செய்வது எப்படி?





முளைகட்டிய காராமணி கிரேவி செய்வது எப்படி?

0
ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டு மென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 
முளைகட்டிய காராமணி கிரேவி செய்வது எப்படி?
ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. 

உடலின் எடையை குறைக்க ராஜ்மாவில் அடங்கி யிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். 

இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதில் அதிகப்படியான புரதச் சத்து நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரேட் அளவினை அதிகமாக சேர்க்க விடாமல் தவிர்க்கின்றது. 

உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். புற்றுநோய் தாக்கத்தை குறைக்க புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுத்துக் கொள்ளலாம். 
இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. 

இதில் வைட்டமின் k அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் புதியதாக செல்கள் உருவாக்குவதில் இருக்கின்ற சிக்கல்களை தடுத்து விடும். 
சரி இனி வெள்ளை காராமணி பயன்படுத்தி டேஸ்டியான முளைகட்டிய காராமணி கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள்:

வெள்ளை காராமணி முளை கட்டியது - 1 கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

பூண்டு - 5

சீரகத் தூள் - கால் ஸ்பூன்

தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

தக்காளி - 1

தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்

பெருங்காயம் தூள் - சிறிதளவு

தாளிக்க:

பட்டை, சோம்பு, கிராம்பு.
உங்கள் கால்கள் கருப்பாக உள்ளதா?
செய்முறை:
முளைகட்டிய காராமணி கிரேவி
வேர் கடலையை ஊற வைத்து தேங்காய் துருவலுடன் அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
35 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கீங்களா?
முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேக வைத்த காராமணி சேர்த்துக் கொதிக்க விடவும்.

அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)