பண்டிகை கால காஷ்மீர் வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?





பண்டிகை கால காஷ்மீர் வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

0
புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. 
பண்டிகை கால காஷ்மீர் வெஜிடபிள் புலாவ்
இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. 

இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,

பெரிய வெங் காயம் - 2,

நறுக்கிய பீன்ஸ், காலி ஃப்ளவர், உருளைக் கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,

இஞ்சி - பூண்டு விழுது, தனியாத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் - தலா ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன் (அல்லது காரத்துக் கேற்ப),

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

பால் - 2 டேபிள் ஸ்பூன்,

குங்குமப்பூ - சிறிதளவு,

முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,

எலுமிச்சை - அரை மூடி,

பிரியாணி இலை, ஏலக்காய் - தலா ஒன்று,

கிராம்பு - 2,

பட்டை - சிறிய துண்டு,

ஆப்பிள் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகள் (சேர்த்து) - அரை கப்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
காஷ்மீர் வெஜிடபிள் புலாவ் செய்வது
பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய் நெய் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து... நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறி களைப் சேர்த்து வதக்கி... 

இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.
அத்துடன் ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும் பாலில் குங்குமப் பூவைக் கரைத்து ஊற்றவும். 

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எல்லாமாகச் ஒன்று சேரும்படி நன்றாக கிளறி விடவும். இறுதியில், பழங்களை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)