ஒருவரது பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆட்டிறைச்சி பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல.
ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மட்டனில் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றம் வலிமைக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
எனவே மட்டனை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சர்க்கரை நோயாளிகளில் தங்கள் இரத்த சர்க்கரை அளவை உணவுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக மட்டனை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை.
மட்டனில் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இவை உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் பருமனடைவதைத் தடுக்கிறது. மனித உடலில் மிகவும் தேவையான ஒரு சத்து தான் இரும்புச்சத்து.
உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை வரும் அபாயமும் குறையும்.
சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
என்னென்ன தேவை?
ஆட்டுக்கால் - 2 துண்டு,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 துண்டு,
காய்ந்த மிளகாய் - 20 கிராம்,
தனியா - 40 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
மிளகு - 10 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 20 கிராம்,
நெய் - 20 கிராம்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து உரலில் இடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் + நெய் ஊற்றி சூடானதும் இடித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை, இடித்த மசாலா பொடி, மஞ்சள் தூள், 2 மட்டன் கால் துண்டுகளை நான்கு துண்டுகளாக நறுக்கி போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.