உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாஸ்தா விரும்பி சாப்பிடப்படுகிறது. அதற்கு இதன் சுவையும், எளிமையான செய்முறையுமே காரணம். ஆனால் பாஸ்தா சாப்பிடுவதை சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
ஒருவேளை நாம் சமைக்கும் முறையில் ஏதாவது தவறு இருக்கிறதா? பாஸ்தா உணவிற்கு கார்போஹைடரேட்டோடு தொடர்பு இருப்பதால் பலரும் இதை சாப்பிட தயங்குகிறார்கள்.
ஆனால் சரிவிகித உணவில் பாஸ்தாவை சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என உலகமே ஒத்துக் கொண்டுள்ளது. பாஸ்தாவை அளவாக உட்கொண்டால், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாகவே எடுத்துக் கொள்வோம்.
இதனால் தேவையின்றி உடல் எடை அதிகரிப்பது ஒழுங்குப் படுத்தப்படும். பாஸ்தா உணவு ஆரோக்கியமற்றது என்று சொல்லப்பட்டு வரும் பொய்யை உடைக்க வேண்டிய நேரமிது.
பாஸ்தா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரியமான பாஸ்தா, மைதா மாவில் தயாரிக்கப் படுகிறது.
இதில் கார்போஹைடரேட்டும் புரதமும் சேர்ந்தே இருக்கின்றன. எனினும் இன்று கடைகளில் முழு கோதுமை பாஸ்தா முதல் சுண்டல் பாஸ்தா வரை பல வகைகளில் கிடைக்கிறது.
இதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது. சுவை மற்றும் வடிவத்தை வைத்தே ஒருவர் பாஸ்தாவை தேர்ந்தெடுத்த போதும், நம்முன் இவ்வுளவு வகையான பாஸ்தாக்கள் இருக்கும் போது நமக்கான பாஸ்தாவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
என்னென்ன தேவை?
சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத் தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். பட்டாணியையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளா க்குங்கள். வெங்காய த்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.
வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வையுங்கள்.
இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை மீண்டும் முதலில் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இறக்கிய சூப்பில், பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.