டேஸ்டியான வெங்காயத்தாள் சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான வெங்காயத்தாள் சட்னி செய்வது எப்படி?

0
வெங்காயத்தாள் பொதுவாக உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. சிலருக்கு இதன் சுவை மிகவும் பிடிக்கும், ஆனால் பலருக்கு அதன் சுவை பிடிக்காது. 
டேஸ்டியான வெங்காயத்தாள் சட்னி செய்வது எப்படி?
வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப் படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.

வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. 

மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள்  நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போ ஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. 
மேலும் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தாளில் சல்பர் எனப்படும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதில் சல்பர் கலவை உள்ளது. எனவே இவை இன்சுலினை உற்பத்தி செய்ய போதுமான திறனை உடலுக்கு அளிக்கிறது. இது நீரிழிவு நோயை பெருமளவில் தடுக்க உதவுகிறது. 

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஏதேனும் ஒரு வகையில் வெங்காயத்தாளை சேர்க்க வேண்டும். சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான வெங்காயத்தாள் சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை :

நறுக்கிய வெங்காயத்தாள் – 200 கிராம்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 4

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 10 பல்

தேங்காய்த் துருவல் – 50 கிராம்

கொத்தமல்லி, புதினா,

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

இஞ்சி – ஒரு துண்டு

பெருங்காயம், மஞ்சள் – கால் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தக்காளி – 3

எலுமிச்சை – பாதி அளவு
செய்முறை
கரகரப்பான தொண்டைக்கு வெங்காயத்தாள் சட்னி செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத் தாளைப் போட்டு, எலுமிச்சையைப் பிழிந்து விட்டு நன்கு வதக்கவும். 

பிறகு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகிய வற்றை அரைத்து, வெங்காயத் தாளுடன் சேர்த்து வதக்கவும்.
ஆந்திராவில் 3 பேர் கழுத்தறுத்து நரபலி - சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம் !
தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகிய வற்றையும் சேர்த்து எடுத்து, லேசாக மசித்துக் கொள்ளவும். 

சிறிது எண்ணெய்யில் கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து, மசியலையும் சேர்த்து, லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)